- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு ‘காமராசரின் சாதனைகள்;, ‘காமராசரின் எளிமை வாழ்வு’ மற்றும் ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர்’ போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். விழாவில் ஆசிரியை தீபா தமிழிலும், ஆசிரியை ஜோஸ்பின் ஜெயந்தி ஆங்கிலத்திலும் காமராசரை பற்றிய உரை நிகழ்த்தினர். போட்டிகளின் நடுவர்களாக ஆசிரியைகள் சுமதி, சுகுமாரி ஆகியோர் பங்கேற்றனர். மழலையர் வகுப்புக் குழந்தைகள் காமராசர் வேடமணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் காமராசர் பற்றிய பாடல்களை பாடினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ரம்யா, வசுமதி மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். காமராசர் பிறந்த நாள் விழாப் போட்டிகளை ஏராளமான பெற்றோர்கள் கண்டுகளித்தனர்.