- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் கல்வியாளர் கவிஞர் மு. கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு குழந்தைகளுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினர். பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.