- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி குழந்தைகள் கலந்துகொண்ட லாலிபாப் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி குழந்தைகளுக்கு லாலிபாப் மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் பேசும்போது “இது மாதிரி நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்துவதன் நோக்கம் குழந்தைகள் கல்வி கற்பதை கசப்பாக நினைக்காமல் இருக்க அவர்களுக்குப் பிடித்த இனிப்பு பொருட்கள் சாக்லேட், லாலிபாப் போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றோம். “இது பள்ளியல்ல இன்னொரு இல்லம் இங்கு சொல்லித் தரும் கல்வியோ இனிக்கும் வெல்லம்”; என்று சிரிப்பும் விளையாட்டுமாய் சின்னக்குழந்தைகள் நம் பள்ளியில் பாடம் கற்கின்றனர்.” என்று பேசினார். கேஜி குழந்தைகள் எல்லா வகுப்புகளுக்கும் சென்று மாணவர்களுக்கு லாலிபாப் கொடுத்தனர். ஆசிரியப் பெருமக்கள் குழந்தைகளுக்கு லாலிபாப் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.