- This event has passed.
ஜனவரி 1ல் பிறந்து ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு தட்டு நிறைய புத்தகங்கள் சிறப்பு பரிசு
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ல் பிறந்த குழந்தைகள் ஜனவரி 1 அன்று பள்ளிக்கு வந்தால் (எந்த பள்ளியில் படிப்பவர் எனினும்) சிறப்பு பரிசுகள் உண்டு என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பல்வேறு தனியார் பள்ளியில் பயிலும் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் பாலமுருகன், நீரஜா, சுபஸ்ரீ, அட்சயா, பீரித்திக்கா ஆகிய குழந்தைகள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கு ஒரு சில்வர் தட்டு நிறைய புத்தகங்கள் வைத்து புத்தகத்தட்டு வழங்கப்பட்டது. சாக்லேட்டுகள், கேக்குகள் போன்ற இனிப்புகளும் வழங்கினர்.