Loading Events
  • This event has passed.

திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்ட அன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். புதிய மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோர்களும் அதனால் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்ற பிறகு மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம். செந்தில்குமார், வழக்கறிஞரும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான நவீன்குமார் மற்றும் துணை முதல்வர் எஸ். குமாரவேல் மாணவர்களை வரவேற்றனர்.

மாணவர்கள் இந்த வாரம் முழுவதும் பாட நூல்கள் கொண்டுவரவேண்டாம் என்றும் இவ்வாரத்தில் நீதி போதனை வகுப்புகள், மருத்துவ ஆலோசனைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், கதைகள், பாடல்கள் என மாணவர்கள் மனதைப் பக்குவப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி தெரிவித்தார்.

பள்ளியில் வாழைமரம், தோரணங்கள் கட்டப்பட்டு புதுக்கோலமிட்டு மாணவர்களை வரவேற்க எழில் கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்தனர்.