- This event has passed.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளயில் மழலைக்குழந்தைகள் பங்குபெற்ற காய்கறிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குறிப்பிடும்போது மழலைப்பருவம் என்பது புதிது புதிதாக கற்றுகொள்ளும் ஆர்வமுள்ள பருவம் ஆகும். ஆகவேதான் மழலைக்குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாக உழவர் சந்தைக்கு களப்பயணம் அழைத்துச் சென்றோம். அதன் தொடர்ச்சியாக தற்போது காய்கறிகள் தினம் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வி;ல் ஏராளமான குழந்தைகள் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட உடைகள், தோடுகள், வளையல்கள், கழுத்துச் சங்கிலிகள், தலைக்கவசம், போன்ற பல்வேறு தோற்றங்களில் பள்ளிக்கு வந்தனர். வகுப்பறைகள் காய்கறித் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மழலைக்குழந்தைகள் தாங்கள் அணிந்து வந்த கத்தரி, தங்காளி, வெண்டை, கேரட், பரங்கி,சுண்டக்காய் போன்ற காய்கறிகளின் பெயர்களையும், அதன் பயன்களையும், அடங்கியுள்ள சத்துக்களையும் சொல்லி அசத்தினார்கள்.