புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி பாஸ்கர் மற்றும் வரி ஆலோசகர் சி.பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். ரோட்டரி பாஸ்கர் தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “உலகத்தின் பணக்காரர்களுக்கெல்லாம் எங்காவது சிலை வைத்திருக்கிறார்களா? மக்களின் மனங்கவர்ந்த தலைவர்களுக்குத்தானே சிலை இருக்கிறது. ஆக மாணவர்களாகிய நீங்கள் பணக்காரர் ஆவதைவிடவும் நல்ல மனசுக்காரர்களாக மாறுங்கள். தேவைப்படுபவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். … Continue reading Independence Day→
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மழலைக்குழந்தைகள் கூட்டங்கூட்டமாக கண்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வந்தனர். பள்ளிக்கு வந்த கண்ணனும் ராதையும் மாறிமாறி வெண்ணெயை பறிமாறிக்கொண்டனர். கண்ணன் ராதை வேடமணிந்த குழந்தைகள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது. மழலைவகுப்பு மாணவர்கள் ஏஞ்சல் உடையில் பள்ளிக்கு வந்தனர். எல்லா வகுப்புக்கும் சென்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். ஏஞ்சல்கள் இரக்கமுடையவர்கள். பிறருக்கு தானே முன்வந்து உதவக்கூடியவர்கள். அன்பானவர்கள் என்ற அடிப்படையில் வளரும் குழந்தைகளிடம் இதுமாதிரி பண்புகளை வளர்க்கும் விதமாகவே ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது.