KG Welcome Function

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் பலூன் மற்றும் பனையோலை தோரணங்கள் கட்டப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதோடு புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மழலைக்குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாலையணிவித்து அவர்களுக்கு இனிப்பு; மற்றும் பலூன்கள் வழங்கி வரவேற்றார். முதல்நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகள் அவர்களுக்கான குளிருட்டப்பட்ட வண்ணவண்ண பொம்மைகள் வரையப்பட்ட வகுப்பறைகளுக்கு … Continue reading KG Welcome Function

Kamarajar Birthday Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு ‘காமராசரின் சாதனைகள்;, ‘காமராசரின் எளிமை வாழ்வு’ மற்றும் ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர்’ போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். விழாவில் ஆசிரியை தீபா தமிழிலும், ஆசிரியை ஜோஸ்பின் ஜெயந்தி ஆங்கிலத்திலும் காமராசரை பற்றிய … Continue reading Kamarajar Birthday Celebration

Lollipop Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி குழந்தைகள் கலந்துகொண்ட லாலிபாப் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி குழந்தைகளுக்கு லாலிபாப் மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் பேசும்போது “இது மாதிரி நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்துவதன் நோக்கம் குழந்தைகள் கல்வி கற்பதை கசப்பாக நினைக்காமல் இருக்க அவர்களுக்குப் பிடித்த இனிப்பு பொருட்கள் சாக்லேட், லாலிபாப் போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றோம். “இது பள்ளியல்ல இன்னொரு இல்லம் இங்கு சொல்லித் தரும் கல்வியோ … Continue reading Lollipop Day

Independence Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி பாஸ்கர் மற்றும் வரி ஆலோசகர் சி.பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். ரோட்டரி பாஸ்கர் தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “உலகத்தின் பணக்காரர்களுக்கெல்லாம் எங்காவது சிலை வைத்திருக்கிறார்களா? மக்களின் மனங்கவர்ந்த தலைவர்களுக்குத்தானே சிலை இருக்கிறது. ஆக மாணவர்களாகிய நீங்கள் பணக்காரர் ஆவதைவிடவும் நல்ல மனசுக்காரர்களாக மாறுங்கள். தேவைப்படுபவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். … Continue reading Independence Day

Krishna Jayanthi Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மழலைக்குழந்தைகள் கூட்டங்கூட்டமாக கண்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வந்தனர். பள்ளிக்கு வந்த கண்ணனும் ராதையும் மாறிமாறி வெண்ணெயை பறிமாறிக்கொண்டனர். கண்ணன் ராதை வேடமணிந்த குழந்தைகள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

National Angel Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது. மழலைவகுப்பு மாணவர்கள் ஏஞ்சல் உடையில் பள்ளிக்கு வந்தனர். எல்லா வகுப்புக்கும் சென்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். ஏஞ்சல்கள் இரக்கமுடையவர்கள். பிறருக்கு தானே முன்வந்து உதவக்கூடியவர்கள். அன்பானவர்கள் என்ற அடிப்படையில் வளரும் குழந்தைகளிடம் இதுமாதிரி பண்புகளை வளர்க்கும் விதமாகவே ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது.