KG Welcome Function

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் பலூன் மற்றும் பனையோலை தோரணங்கள் கட்டப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதோடு புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மழலைக்குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாலையணிவித்து அவர்களுக்கு இனிப்பு; மற்றும் பலூன்கள் வழங்கி வரவேற்றார். முதல்நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகள் அவர்களுக்கான குளிருட்டப்பட்ட வண்ணவண்ண பொம்மைகள் வரையப்பட்ட வகுப்பறைகளுக்கு … Continue reading KG Welcome Function

Kamarajar Birthday Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு ‘காமராசரின் சாதனைகள்;, ‘காமராசரின் எளிமை வாழ்வு’ மற்றும் ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர்’ போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். விழாவில் ஆசிரியை தீபா தமிழிலும், ஆசிரியை ஜோஸ்பின் ஜெயந்தி ஆங்கிலத்திலும் காமராசரை பற்றிய … Continue reading Kamarajar Birthday Celebration

Lollipop Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி குழந்தைகள் கலந்துகொண்ட லாலிபாப் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி குழந்தைகளுக்கு லாலிபாப் மாலை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் பேசும்போது “இது மாதிரி நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்துவதன் நோக்கம் குழந்தைகள் கல்வி கற்பதை கசப்பாக நினைக்காமல் இருக்க அவர்களுக்குப் பிடித்த இனிப்பு பொருட்கள் சாக்லேட், லாலிபாப் போன்ற தினங்களைக் கொண்டாடுகின்றோம். “இது பள்ளியல்ல இன்னொரு இல்லம் இங்கு சொல்லித் தரும் கல்வியோ … Continue reading Lollipop Day

Independence Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி பாஸ்கர் மற்றும் வரி ஆலோசகர் சி.பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். ரோட்டரி பாஸ்கர் தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “உலகத்தின் பணக்காரர்களுக்கெல்லாம் எங்காவது சிலை வைத்திருக்கிறார்களா? மக்களின் மனங்கவர்ந்த தலைவர்களுக்குத்தானே சிலை இருக்கிறது. ஆக மாணவர்களாகிய நீங்கள் பணக்காரர் ஆவதைவிடவும் நல்ல மனசுக்காரர்களாக மாறுங்கள். தேவைப்படுபவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். … Continue reading Independence Day

Krishna Jayanthi Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மழலைக்குழந்தைகள் கூட்டங்கூட்டமாக கண்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வந்தனர். பள்ளிக்கு வந்த கண்ணனும் ராதையும் மாறிமாறி வெண்ணெயை பறிமாறிக்கொண்டனர். கண்ணன் ராதை வேடமணிந்த குழந்தைகள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

National Angel Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது. மழலைவகுப்பு மாணவர்கள் ஏஞ்சல் உடையில் பள்ளிக்கு வந்தனர். எல்லா வகுப்புக்கும் சென்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். ஏஞ்சல்கள் இரக்கமுடையவர்கள். பிறருக்கு தானே முன்வந்து உதவக்கூடியவர்கள். அன்பானவர்கள் என்ற அடிப்படையில் வளரும் குழந்தைகளிடம் இதுமாதிரி பண்புகளை வளர்க்கும் விதமாகவே ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது.

Vijayadashami 2019

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியை யொட்டி புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகின்றது ஆரம்பக்கல்வியை கற்றுக் கொள்ள ஆர்வமுடன் வந்த மழலைகளைகளையும் பெற்றோர்களையும் முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்று இனிப்புகளை வழங்கினார். ஆசிரியைகள் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு நெல்லில் தமிழ் முதல் எழுத்தான அ என்று எழுத சொல்லிக்கொடுத்தனர். மழலைக் குழந்தைகள் பெற்றோர்களுன் தாங்கள் அமர்ந்து படிக்க இருக்கும் வகுப்பினையும் ஆா்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

Alumni Drawing Competition

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகளை முன்னாள் மாணவர்கள் நடத்தினர். எல்.கே.ஜி முதல் பதினோறாம் வகுப்பு வரைக்குமான மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. தங்கக்கூடு என்னும் பெயரில் செயல்பட்டு பல்வேறு சமூகப்பனிகளைச் செய்து வரும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகளை நடத்தினர்.

Vegetables Day

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளயில் மழலைக்குழந்தைகள் பங்குபெற்ற காய்கறிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி குறிப்பிடும்போது மழலைப்பருவம் என்பது புதிது புதிதாக கற்றுகொள்ளும் ஆர்வமுள்ள பருவம் ஆகும். ஆகவேதான் மழலைக்குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாக உழவர் சந்தைக்கு களப்பயணம் அழைத்துச் சென்றோம். அதன் தொடர்ச்சியாக தற்போது காய்கறிகள் தினம் கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வி;ல் ஏராளமான குழந்தைகள் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட உடைகள், தோடுகள், வளையல்கள், கழுத்துச் … Continue reading Vegetables Day

Children’s Day Celebration

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் வாசல் பலூன் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு குழந்தைகளை வரவேற்று ஆசிரியப்பெருமக்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர் நேருமாமா வேடமணிந்து வந்த குழந்தைகள் ஜவகர்லால் நேரு படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளை கொண்டாடவேண்டும் என்பதற்காக ஆசிரியப்பெருமக்கள் பாடல், நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சு ஆகியவற்றை … Continue reading Children’s Day Celebration

Award Festival 2020

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளியின் தங்கக்கூடு எனும் முன்னாள் மாணவர்கள் அமைப்பபினர் இணைந்து நடத்தினர். விழாவிற்கு பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை செந்தில் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயலெட்சுமி என்ற சுகன்யா, புதுகை மருத்துவக்கல்லூரி எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் … Continue reading Award Festival 2020

Sport’s Day

KKC Stadium Pudukkottai, Tamil Nadu, India

Sport's Day Celebration   

Annual Day

School Campus School Campus, Pudukkottai, TamilNadu, India

Kindergarten Graduation Ceremony

School Campus School Campus, Pudukkottai, TamilNadu, India

“உங்களைவிடவும் பெருங்கனவுகளோடு பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்” பள்ளி விழாவில் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய கவிஞர் மனுஷி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கர் விருதுபெற்ற எழுத்தாளர் கவிஞர் மனுஷி கலந்தகொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “இந்த மழலை மாணவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. ஏனென்றால் இதுமாதிரி கோட்டுப்போட்டு, … Continue reading Kindergarten Graduation Ceremony

Gandhi Jayanti 2019

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான குழந்தைகள் காந்திவேடமிட்டு வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டார். விழாவுக்கு தலைமையேற்ற பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது “இன்றைக்கு நாம் தேசத்தந்தை மாகாத்மாவின் நூற்று ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். காந்திக்கு இந்த சுதந்திர எண்ணத்தை, விடுதலைக்குப் போராடும் குணத்தை உருவாக்கியது தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழகத்து … Continue reading Gandhi Jayanti 2019